/ கட்டுரைகள் / சிறுகதை எழுதுவது இப்படித்தான்
சிறுகதை எழுதுவது இப்படித்தான்
சிறுகதை எழுத சூட்சுமம் சொல்லி தரும் நுால். மனதில் உதிக்கும் கருத்தை செதுக்கி, அழகிய சிறுகதைகளாக எப்படி உருவாக்குவது, அதன் உள்ளடக்கம், களம் எப்படி இருக்க வேண்டும் என்பதை படிப்படியாக சொல்கிறது. முன்னோடி எழுத்தாளர்கள் கந்தர்வன், ஜெயகாந்தன் படைப்புகள் கொண்டு விளக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற படைப்புகளையும் அறிமுகம் செய்கிறது. சிறுகதைக்கு தலைப்பு எத்தனை முக்கியமானது என்பதை தெள்ளத்தெளிவாக உரைக்கிறது. வட்டார வழக்கின் மேன்மையை எடுத்துக்காட்டுகிறது. சிறுகதைகளுக்கான கூறுகளை விளக்கும் அதே நேரம் இறுதியில் ஒரு சிறுகதையும், பிற புத்தக விபரங்களும் தரப்பட்டிருக்கின்றன. சிறுகதை எழுத முயல்வோர் படிக்க வேண்டிய புத்தகம். – ஊஞ்சல் பிரபு




