/ சிறுவர்கள் பகுதி / சிறுவர் நாடகக் களஞ்சியம்
சிறுவர் நாடகக் களஞ்சியம்
சிறுவர் நாடகத்துறையில் குறிப்பிட்ட பங்களிப்பை வழங்கியோரின், 37 சிறுவர் நாடகங்கள் இந்தத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அழ.வள்ளியப்பா, பூதலுார் முத்து முதலானோரின் நாடகங்களும் இடம்பெற்றுள்ளன. அனைத்து நாடகங்களும் மேடையில் நடிக்கும் அமைப்பைப் பெற்று விளங்குகின்றன. நுாலின் தொடக்கத்தில் சிறுவர் நாடகம் பற்றிய ஒரு முன்னுரையைத் தொகுப்பாசிரியர் படைத்துள்ளார். சிறுவர் நாடக இலக்கிய வரலாறாக விரியும் அளவிற்கு அமைந்த முன்னுரை, ஆய்வாளர்களுக்கு உதவும். தமிழில் அரிதினும் அரிதாக வெளிவரும் நாடக நுால்களில் புதிய முயற்சி.– முகிலை இராசபாண்டியன்