/ சிறுவர்கள் பகுதி / சிறுவர்கள் சாதனையாளர்களாக உதவும் சிறுகதைகள்

₹ 110

உலகில் அழியாத தடம் பதித்த வரலாற்று நாயகர்களின் குறிப்பிடத்தக்க பயணங்களை விவரிக்கும் நுால். இளைஞர்களுக்கு உத்வேகம் ஊட்டி கலங்கரை விளக்கமாக திகழ்கிறது.இதில், 14 சாதனையாளர்களின் கதைகள் சொல்லப்பட்டுள்ளன. செயல், ஆற்றலால் அந்தந்த துறைகளில் முன்னோடியாக இருந்தவர்கள். மகாத்மா ஜோதிராவ் பூலே, சாவித்திரிபாய், தாமஸ் ஆல்வா எடிசன், ஐன்ஸ்டீன், அன்னை தெரசா, சார்லஸ் மார்க்ஸ், ஆபிரகாம் லிங்கன், காமராஜர் மற்றும் நாயகர்களை உள்ளடக்கியுள்ளது.அறிவு, சமத்துவம், சமூக நீதிக்காக போராடிய அறிவார்ந்த மேதைகளின் கதைகள், வளரும் தலைமுறைக்கு ஊக்கமளிக்கும் வகையில் உள்ளன. வாழ்க்கையில் மகத்தான சாதனை படைத்தவர்கள் பற்றிய நுால்.– -வி.விஷ்வா


முக்கிய வீடியோ