/ சிறுவர்கள் பகுதி / சிறுவர்களுக்கான திருக்குறள் 100
சிறுவர்களுக்கான திருக்குறள் 100
சிறுவர் – சிறுமியர் மனப்பாடம் செய்வதற்கு ஏற்ப, தேர்ந்தெடுத்த 100 குறட்பாக்களை தொகுத்து தரும் நுால். அறக்கருத்துகளை அறிந்து சுலபமாக மனப்பாடம் செய்ய ஏற்றவாறு திருக்குறள்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளன. பல அதிகாரங்களில் இருந்து தொகுக்கப்பட்டுள்ளதால் குறள் வரிசை எண்ணும் தரப்பட்டு உள்ளது. புரிந்துகொள்ள ஏதுவாக தெளிவான உரையும் உள்ளது. நம்பிக்கை சார்ந்து மட்டுமின்றி, நன்றியை அறிதல், குற்றம் செய்யாமல் தடுக்கும் நடைமுறைக்கான பண்புகள், அன்பு கொள்வதில் உள்ள சிறப்புகளை அறிவுறுத்தும் குறட்பாக்கள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. கருத்துகளை புரிய வைப்பதுடன், எளிய நடையில் விளக்க உரையும் தரப்பட்டுள்ளது. சிறுவர்களுக்கு உதவும் நுால். – ஒளி




