/ ஆன்மிகம் / சிவஞான சித்தியார் – சுபக்கம் செந்தமிழுரை
சிவஞான சித்தியார் – சுபக்கம் செந்தமிழுரை
சிவஞான போதத்தில் ஆன்மிகத் தத்துவங்களை எடுத்துரைக்கும் சிவஞான சித்தியார் என்ற நுாலுக்கான விளக்கவுரை. மூலநுாலில் வடசொற்கள் விரவி இருப்பதால், தமிழ்க் கலைச் சொற்களோடு எளிதில் விளங்கும் வகையில் உள்ளது. புதிய விளக்கம், தகவல்கள் சேர்த்து எழுதப்பட்டுள்ளது. செய்யுள்களில் வடமொழிச் சொற்களுக்கு தனித்தமிழில் கலைச்சொற்கள் தரப்பட்டுள்ளன. அக, புற வகை மற்றும் பரபக்கம், சுபக்கத்தக்க விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அருகநெறி, புத்தநெறி விளக்கக் குறிப்புகளும் தரப்பட்டுள்ளன. எண்ணலளவை, எடுத்தலளவை, முகத்தலளவை, நீட்டலளவை விளக்கப்பட்டுள்ளன. சூத்திரங்களுக்கான உரைகளும், விளக்கங்களும் சிவாகம சித்தாந்தத்தைத் தெளிவாகப் புரிய உதவுகின்றன. சிவம் என்பதற்கு பொருள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. படிக்க வேண்டிய ஆன்மிகக் கருவூலம்.– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு