/ வாழ்க்கை வரலாறு / சிவகார்த்திகேயன்

₹ 110

நடிகர் சிவகார்த்திகேயன் வெள்ளித் திரையில் பெற்ற வெற்றியின் பின்னணி குறித்து அலசும் நுால். மனிதனுக்கு தன்னம்பிக்கையும், சரியான திட்டமிடலும் இருந்தாலே வெற்றி கிடைக்கும் என்பதை தனி மனிதனை முன்வைத்து, 14 அத்தியாயங்களில் சொல்லப்பட்டுள்ளது. வெள்ளித் திரையில் புகழ் மங்கியோர் தான் சின்னத் திரைக்கு வருவர் என்ற கருத்தை மாற்றுகிறது. வெள்ளித் திரையில் சாதனை புரிய, சின்னத் திரையை பயன்படுத்திய முதல் நடிகர் சிவகார்த்திகேயன் என தெளிவுபடுத்துகிறது. சிவகார்த்திகேயன் இளமை பருவம், குடும்ப பின்னணி, நகைச்சுவை வீச்சு, நடிகனாக உதயம், சினிமாவின் முதல் படிக்கட்டு, கதாநாயகனாக வளர்வது, தயாரிப்பாளராக அவதாரம், விருதுகள், திருப்புமுனை என வாழ்க்கையை காட்டும் நுால். – ஊஞ்சல் பிரபு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை