/ கதைகள் / சிவமாலை
சிவமாலை
சமூக ஏற்றத்தாழ்வுகளை படம் பிடிக்கும் நாவல். ஏழை குடும்பத்தைச் சேர்ந்த செல்வம், தந்தை இறக்க, தாய், சகோதரியுடன் குடும்ப பொறுப்பை ஏற்கிறார். செல்வத்திற்கும், சகோதரிக்கும் 30 வயதை கடந்தும் பணமின்மையால் திருமணமாகவில்லை. குடும்பத்துக்கு தெரியாமல், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பணிக்கு சேர்கிறார் செல்வம். இது தாய், சகோதரிக்கு பிடிக்கவில்லை. ஒரு கட்டத்தில், கூட்டுறவு சங்கத்தில் பணி புரியும் மற்றொரு ஜாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்கிறார். இதை வீடும், ஊரும் ஏற்கவில்லை. வீட்டை காலி செய்ய வேண்டும் என்ற பஞ்சாயத்து முடிவு. காவல் நிலையம் சென்றால் சட்டமும் கைவிட்டது. பின், என்ன முடிவு எடுத்தனர் என விடை காண்கிறது. சமூக அவலங்களை தோலுரிக்கும் நாவல். – டி.எஸ்.ராயன்




