/ இசை / சூலமங்கலம் ராஜலட்சுமி திரையிசைப் பாடல்கள்
சூலமங்கலம் ராஜலட்சுமி திரையிசைப் பாடல்கள்
சூலமங்கலம் ராஜலட்சுமி பாடிய திரைஇசை பாடல்களின் தொகுப்பு நுால். சூலமங்கலம் ராஜலட்சுமி பாடிய முதல் பாடலை எழுதியது உடுமலை நாராயணகவி என்ற தகவலுடன் துவங்குகிறது. சாதனையாக, 8ம் வயதிலே பாடியதை கூறுகிறது. எல்லா பாடல்களும் தொகுத்து தரப்பட்டுள்ளன. திரைப்படங்களுக்கு இசையமைத்ததையும் குறிப்பிடப்பட்டுள்ளது. எம்.கே.தியாகராஜ பாகவதர் முதல் புகழ் பெற்றவர்களுடன் இணைந்து பாடியதையும் குறிப்பிடுகிறது. தஞ்சை மாவட்ட ஊர் பெயருடன் அழைக்கப்படுவதை குறிப்பிடுகிறது. திரையிசை மற்றும் கர்நாடக சங்கீதத்தில் சிறப்பாக தடம் பதித்ததை தெளிவாக எடுத்துக் கூறும் நுால். – முகிலை ராசபாண்டியன்