/ கவிதைகள் / சொற்களின் சொரூபம்

₹ 100

சமூகத்தை உற்று நோக்கி படைக்கப் பட்டுள்ள கவிதைகளின் தொகுப்பு நுால். முதலில், ‘வெட்டக்கூடாது என்பது எப்போது புரியும் மர மண்டைகளுக்கு’ என, காடு அழிப்பை சாடுகிறது. லஞ்சம் கொடுப்பதையும், வாங்குவதையும் கண்டிக்க, ‘இரவு வாகனச் சோதனை... ஊதுகிறான் நோட்டை, அணைக்கிறது அதிகாரம்’ என, நுட்பமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நகர சாலைகளின் தரம் எப்படி இருக்கிறது என்பதை வெளிப்படுத்த, ‘ஒரு நொடி மழைக்கே நிரம்பிவிட்டன குளங்கள் சாலையில்’ என, அங்கலாய்த்து காட்சியாக சித்தரித்துள்ளது. அரசியல்வாதிகளை சாடும் விதமாக, ‘உண்மையே... அந்தப் பக்கம் போகாதே பிரசாரக் கூட்டம் நடக்கிறது’ என, உரைக்கிறது. அவலங்களை சுட்டிக்காட்டும் கவிதை தொகுப்பு நுால். – ஒளி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை