/ இலக்கியம் / ஸௌராஷ்ட்ர இலக்கியம்
ஸௌராஷ்ட்ர இலக்கியம்
சவுராஷ்டிரா சமூகத்தில் தோன்றியுள்ள இலக்கியங்கள் குறித்த நுால். சவுராஷ்டிரா சமூகத்தில் பிரபலமான ஸ்ரீ வேங்கடரமண பாகவதர், ஸ்ரீ வேங்கட ஸூரி சுவாமிகள், ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகள். இதில், ஸ்ரீ வேங்கட ஸூரி சுவாமிகள் பால ராமாயணம், பாரத பாகவத புராணங்கள், வியாகாரணம், சப்தமஞ்சரி, உறையூர் நாச்சாம்மா சதகம், ராமாவளி, கிருஷ்ணாவளி இயற்றியதை எடுத்துரைக்கிறது. சொற்சுவை, உவமை நயம், எதுகை, மோனை, சந்த நயங்களுடன் சிறப்பை விளக்குகிறது. ஸ்லோகங்களுக்கு தமிழில் விளக்கங்கள் தரப்பட்டு உள்ளன. ராகமும் தாளமும் கூறப்பட்டுள்ளது. அரும்பதங்களுக்கு பொருளும் தரப்பட்டுள்ள நுால். – புலவர் சு.மதியழகன்




