ஸ்ரீஅரவிந்தரின் மகா காவியம்: சாவித்ரி எனும் ஞான இரகசியம்
பக்கம்: 584 ஸ்ரீ அரவிந்த யோகியின் மகா காவியத்தை, நூலாசிரியர் நன்கு கற்று, புரிந்து கொண்டு, அதை உரைநடையில், 49 கட்டுரைகளாக வழங்கியிருக்கிறார். சைவ சித்தாந்தத்தில் ஆழ்ந்த புலமையுள்ள நூலாசிரியர், ஸ்ரீ அரவிந்தரின் ஆன்மிக கருத்துக்களுடன், சில சைவ சித்தாந்தக் கருத்துக்களையும் ஒப்பிட்டு, வாசகர்களை யோசிக்க வைத்திருக்கிறார். மிகவும் கடினமான அசுவபதியின் யோகம் பற்றி, நூலாசிரியர் எழுதியுள்ள கட்டுரைகள் கவனத்திற்குரியவை. "இருளும் ஒளியும் இரு அன்னையராகிய அசுவபதியை, தங்கள் மடி மீது தாலாட்டித் தவழும் குழவியாக்கினர் என்று, வாசகத்தின் பின் ஆழ்ந்த பொருள் உள்ளது. இதை மிக அழகாக விவரிக்கிறார் ஓம்பவதாரிணி அன்னை. இந்த நூலுக்கு, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.நடராஜனின் முன்னுரையும், முனைவர் மா.அறிவொளி, கவிஞர் ஆர்.மீனாட்சி, முனைவர் சபாரத்தினம் ஆகியோரின் கூடுதல் அணிந்துரைகளும் சிறப்புச் சேர்க்கின்றன. "சாவித்ரி எனும் அமர காவியத்தை வாசித்துப் புரிந்து கொள்ள ஆசைப்படுபவர்களுக்கு, இந்த நூல் மிகப் பெரிய அளவில் பயன்படும்.