/ இலக்கியம் / ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகள் அருளிச்செய்த திருவகுப்பு, வேல், மயில், சேவல், விருத்தங்கள், திருஎழுகூற்றிருக்கை

₹ 120

பக்கம்: 232 முனைவர் ம.ராமகிருஷ்ணன், "திருப்புகழ்நெறி பரவுதற்கென்றே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். ஆன்மிகப் பணியில் தற்போது முழுமையாக ஈடுபட்டுள்ள இவர், "வரிசைதரும் பதம் அதுபாடி வளமொடு செந்தமிழ் உரைசெய அன்பரும் மகிழ வரங்களும் அருள்வாயே என்னும் அருணகிரிநாதரின் வரத்தைப் பெற்றவர்.ஒரே பொருளை பலவிதமாக வகுத்தும், தொகுத்தும், சொல்லும் நூல் வகைக்கு வகுப்பு என்று பெயர். இதில் சீர்பாத வகுப்பு துவங்கி, திருப்பரங்கிரி வகுப்பு ஈறாக, 25 வகுப்புகளுக்கு தெளிவுரையும், வேல், மயில், சேவல் விருத்தங்களுக்குத் தெளிவுரையும் வழங்கப்பட்டுள்ளன.சித்திரக் கவிகளில் ஒருவகையான, "எழு கூற்றிருக்கை ரதபந்தத்தில் அமையப்பெற்றது. நக்கீரர்,திருஞானசம்பந்தர்,திருமங்கையாழ்வார்,ஆகியோர்அருளியதிருவெழகூற்றிருக்கைகளிலிருந்து (தேர் உருவம்) அருணகிரிநாதரின் படைப்பு சிறிது மாற்றம் பெற்றுள்ளதையும் நூலாசிரியர் நுணுக்கமாகத் தெளிவுபடுத்தியுள்ளார்.மரபுக்கவிதை படைக்க விரும்பும் கவிஞர்களுக்குப் பயன்படக்கூடிய நூல். தவிரவும் திருப்புகழ் அன்பர்கள் விரும்பிப் படிக்கக்கூடிய அருணகிரி நாதரின் ஆன்மிக இலக்கிய நூலிது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை