/ ஆன்மிகம் / ஸ்ரீ பரமாச்சார்யாள் பாதையிலே...

₹ 80

134 (58/2), டி.எம்.வி., கோவில் தெரு, மயிலை, சென்னை-4. (பக்கம்: 176 ) ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத் குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளை "நடமாடும் தெய்வம் என மக்கள் வழிபட்டு வருகின்றனர். சென்ற இடங்களில் எல்லாம் நமது மதம், சாத்திரங்கள், சம்பிரதாயம் தொடர்பான பல நுணுக்கமான உண்மைகளை எல்லோரும் புரிந்து கொள்ளும் விதமாக விளக்கி வந்தார். ""நல்ல குணசாலிகளுக்கு பொறுமை, பலம், விடா முயற்சி, புலனடக்கம், திறமை, எச்சரிக்கை, தைரியம், ஞாபக சக்தி, ஆலோசித்து செயலாற்றுவது, இதெல்லாம் ஐஸ்வர்ய லோகத்துக்குப் போகிற பாதை. பொறாமை, ஆயுளைத் தின்கிற கரையான். தற்புகழ்ச்சி, குரு நிந்தனை ஆகிய இரண்டும் வித்தைக்குச் சத்துரு. அதிகப் பேச்சு செல்வத்துக்குப் பகை... என்று எல்லாம் பரமாச்சார்யாள் பேசுகிறார். ஆன்மிகப் பொக்கிஷம்.


முக்கிய வீடியோ