/ ஆன்மிகம் / ஸ்ரீ இராமபிரான்
ஸ்ரீ இராமபிரான்
இரண்டு எழுத்து நாயகரின் வரலாற்றை ஸ்ரீ ராமபிரான் என்று புதுக் கவிதை வடிவில் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் திருக்குறள் தொடர்களும், கம்பராமாயண வரிகளும் கவிதைக்கு கைகொடுக்கின்றன. நடையில் நின்றுயர் நாயகனின் வரலாற்றைப் பால காண்டம் முதல் உத்தர காண்டம் வரை கவிதை நடையில் நவில்கிறது. கிட்கிந்தா காண்டத்தில் தற்கொலை எண்ணம் யாருக்கும் வரலாகாது என்பதை லக்குவன் மூலமாக, ‘மரணத்தை யாரும் வரவைத்துக் கொள்வது கோழைத்தனம்’ என்ற வைர வரிகள், உலகத்திற்கே அறிவுரை வழங்கும் நுால். – பேராசிரியர் இரா.நாராயணன்