/ ஆன்மிகம் / ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்

₹ 200

படித்தவர், உயர் குலத்தவர் என இறைவன் பகுத்தறிந்து அன்பை தருவதில்லை; எளிமையும், எல்லையில்லா சரணாகதியும் தான் இறைவனை உடலுடன் ஒன்றச் செய்கிறது. உயிரை உருக்கி தன்னை நோக்கி வரச் செய்கிறது. காளி பக்தியால் தன்னை உயர்த்திய ராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றிய வரலாறு இது.காளி அருளால் மதங்களின் சாராம்சங்களை முழுமையாக அறிந்தவர். அனைத்தும் காட்டும் வழி ஒன்றே என பக்குவப்பட்ட மகான், அவரின் எளிய வாழ்க்கை பிரமிக்க வைக்கிறது. இல்லறத்திலும் துறவறம் மேற்கொள்ளலாம் என காட்டிய மகா புருஷர். மனைவியை தான் வணங்கும் தெய்வமாக வழிபட்டு வாழ்ந்த மகானின் வாழ்க்கை குறிப்பு நுால்.– எம்.எம்.ஜெ.,


புதிய வீடியோ