/ வாழ்க்கை வரலாறு / ஸ்ரீ ராமானுஜர்

₹ 170

வைஷ்ணவ குரு பரம்பரையில் ராமானுஜரின் தெய்வீக வாழ்க்கை நிகழ்வுகளை தொகுத்து தரும் நுால். விசிட்டாத்வைத தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு வைணவ கோட்பாடுகளை பரவலாக்கிய ராமானுஜரின் வேதாந்த கோட்பாடுகளை பதிவு செய்கிறது. சமுதாய புரட்சிகளை எடுத்துரைக்கிறது. ஏற்றத்தாழ்வுகளைக் களைவதில் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளை சான்றுகளோடு விளக்குகிறது. ராமானுஜர் செய்த சமூக சீர்திருத்தங்களை அறியத் தருகிறது. குலப்பெருமையைக் காட்டிலும் ஞானத்துக்கே முதலிடம் தந்ததை தெளிவாக விளக்குகிறது. ராமானுஜரின் துாய்மையான மனிதநேய கோட்பாடுகள், எத்தகைய உள்ளத்தையும் துலக்கக் கூடியவை என உறுதி செய்கிறது. படித்து பயன்பெற வேண்டிய நுால். – கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு


புதிய வீடியோ