/ ஆன்மிகம் / ஸ்ரீரங்க விஜயம்
ஸ்ரீரங்க விஜயம்
பூலோக வைகுண்டம் ஸ்ரீரங்கத்தில் கோவில் கொண்டு திகழும் சரித்திரத்தை விவரிக்கும் நுால். கிளிச்சோழனுக்கு கிளி உருவில் சுக மகரிஷி உபதேசித்த கதையாக தொகுக்கப்பட்டுள்ளது. தேவதைகளில் எப்படி விஷ்ணுவே உயர்ந்தவரோ, மந்திரங்களில் எப்படி பிரணவம் உயர்ந்ததோ, அதுபோல திவ்ய க்ஷேத்திரங்களில் ஸ்ரீரங்கம் உயர்ந்தது என்பதையும், நல்லவர்களை காக்க ஸ்ரீமன் நாராயண் பல அவதாரங்கள் எடுப்பதையும் கூறுகிறது.மகா விஷ்ணுவாக உருவெடுத்த விதம், பிரம்மா படைப்புத் தொழில் துவங்கிய வரலாறு, காவிரிக்கரையில் சந்திர புஷ்கரணித் தடாக சிறப்பையும் சுவைபட விவரித்திருப்பது வரப்பிரசாதம்.– இளங்கோவன்