/ ஆன்மிகம் / நட்சத்திர திருத்தலங்கள்
நட்சத்திர திருத்தலங்கள்
நவக்கிரக கோவில்கள் போல, 27 நட்சத்திர கோவில்கள் பற்றிய விபரங்கள் கூறும் நுால். நட்சத்திரங்களாக உள்ள 27 பெண்கள் வணங்கிய பரிகார தலங்களின் விபரம் படங்களுடன் தரப்பட்டுள்ளன. அசுவினிக்கு மருத்துவ சக்தி அதிகம் என, திருத்துறைப்பூண்டி மருந்தீஸ்வரரை வழிபட பரிந்துரைக்கிறது. பரணிக்கு, நல்லாடை அக்னீஸ்வரர் கோவில். இங்கு, சுவாமி அக்னி வடிவில் இருப்பதால் லிங்கத்தை சுற்றி தண்ணீர் ஊற்றுவதாக குறிப்பிடுகிறது. கார்த்திகைக்கு உகந்தது மயிலாடுதுறை காஞ்சன நகரம். இது திருமண தடையை நீக்குகிறது. ரோகினிக்கு, காஞ்சிபுரம் பாண்டவ துாத பெருமாள் கோவில் என வழிகாட்டுகிறது. பிறந்த நட்சத்திரத்திற்கு உரிய தலங்கள் பற்றி வழிகாட்டும் நுால். – முனைவர் மா.கி.ரமணன்