/ கட்டுரைகள் / சுடுமணல் சுரந்த நீர்
சுடுமணல் சுரந்த நீர்
தவறு செய்வோர் ஆண்டவன் பிடியில் இருந்து தப்பிக்க முடியாதென்று விளக்கும் நுால். நேர் வழியில் சரியான மனிதனாக வாழ வலியுறுத்துகிறது.வாழ்க்கையை ஒழுங்குபடுத்தும் சட்டங்கள் இன்று, தவறு செய்வதற்கும் அதிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் பயன்படுத்தப்படுகிறது என்கிறது. கூலிப்படை கொடூரம் குறித்தும், இரக்கம் மனிதனுக்கு மட்டுமல்ல மிருகம், செடி, கொடி, மரங்களுக்கும் உண்டு என விளக்குகிறது.பிரஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட ரூசோவின் வறுமை, வாலி, வீபீஷணன், கிருஷ்ணன், குந்தியை புதிய கோணத்தில் விமர்சிக்கிறது. லஞ்சத்தை ஒழிக்க, குழந்தைகளுக்குப் பாலுாட்டும் பருவத்திலிருந்து பயிற்சி கொடுக்க வேண்டும் என்கிறது. இளைஞர்களுக்கு சிந்தனையை துாண்டும் நுால். – முனைவர் கலியன் சம்பத்து