/ ஆன்மிகம் / சுந்தர காண்டம்

₹ 120

அவதார புருஷன் ராமன் கதையாக மலர்ந்துள்ள நுால். நீதி படும் துன்பம், அநீதி ஆடும் ஆட்டம், பின் அழிவு என உலகுக்கு உணர்த்துகிறது. சுந்தர காண்டத்திற்கு முதலில் ஆஞ்சநேயர் காண்டம் என பெயர் இருந்ததையும், ஆஞ்சநேயரின் மறுபெயர் சுந்தரம் என்பதால் சுந்தர காண்டம் ஆனதையும் சொல்கிறது. பெண் விரும்பாமல் தீண்ட மாட்டேன் என்ற ராவணன் குணம் வித்தியாசமாக விவரிக்கப்பட்டுள்ளது. ராமனை தவிர மற்றவரை மனதாலும் நினைக்க மாட்டேன் என்ற சீதையின் கற்பு போற்றப்படுகிறது. சீதையிடம் இன்னும் இரண்டு மாதத்தில் ராமர் மீட்பார் என அனுமன் நம்பிக்கை ஊட்டுவது சிறப்பு. போருக்கு போகும் முன் இந்திரஜித் தந்தை ராவணனை வணங்குவது, தந்தை சொல்லுக்கு கட்டியம் கூறுகிறது. எளிய நடையிலான நுால். – சீத்தலைச்சாத்தன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை