/ வாழ்க்கை வரலாறு / சுதந்திர நள்ளிரவில் ஜவஹர்லால் நேரு
சுதந்திர நள்ளிரவில் ஜவஹர்லால் நேரு
நேருவின் மனதின் ஆழத்தில் இருந்த சுதந்திர கனவை விவரிக்கும் நுால். சுதந்திர இந்தியாவில் மூவர்ண கொடியை ஏற்றியபோது, நேரு ஆற்றிய உரையை பகிர்கிறது. மதசார்பின்மை உணர்வு மேலோங்க எடுத்துக் கொண்ட சிரத்தையை கூறுகிறது. மூவர்ண கொடியின் வரலாறு, தேசிய கீதம், வந்தே மாதரம் பாடல்களின் மகத்துவத்தை எடுத்துரைக்கிறது. லாகூர் காங்கிரஸ் மாநாட்டில் நேருவின் தலைமை ஏற்பு சிறப்புகளை விவரிக்கிறது. ஆங்கிலேயரால் தாக்கப்பட்ட லஜபதி ராய், காந்தி – இர்வின் ஒப்பந்தம், இந்திய அரசு சட்டம் 1935, இரண்டாம் உலக போரில் நேருவின் எதிர்ப்பு, நேரு – பட்டேல் இடையே கருத்து வேறுபாடுகளை தெளிவாக அலசுகிறது. முதல் பிரதமர் நேரு ஆட்சிக் காலத்தை அறிய உதவும் நுால். – டி.எஸ்.ராயன்