/ வாழ்க்கை வரலாறு / தமிழ் நாயகன் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்
தமிழ் நாயகன் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்
‘பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்; ஆனால், இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்’ என வழிகாட்டிய விஞ்ஞானி அப்துல் கலாம் பற்றிய நுால். கலாம் வாழக்கை தகவல்கள் 20 தலைப்புகளில் கூறப்பட்டுள்ளன. ஷில்லாங் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, பாதுகாவலனாக வந்த வாலிபரிடம் கலாம் காட்டிய அன்பு நெகிழ வைக்கிறது. அந்த நிகழ்வின் போது மயங்கி விழுந்து, இறுதியானது பற்றிய தகவல் மனம் கனக்க வைக்கிறது. குடும்பம் வறுமையால், கலாமின் தாய் உணவின்றி தவித்ததை மனம் வருந்தியது பற்றியும் பதிவாகியுள்ளது. இளமை கால வாழ்க்கை, வழிகாட்டிய மூவர்களை பற்றிய விபரங்களும் விரிவாக தரப்பட்டுள்ளன. கலாம் ஜனாதிபதி பொறுப்பேற்ற நிகழ்வையும் பதிவு செய்துள்ள நுால். – முகில்குமரன்




