/ இலக்கியம் / தமிழ் இலக்கியப் பேழை
தமிழ் இலக்கியப் பேழை
மணிவாசகர் நூலகம், 31, சிங்கர் தெரு, சென்னை-18. போன்: 044-2536 1039 (பக்கம்: 226) தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் அறிமுகப்படுத்தும் நூல். தொல்காப்பியம் தொடங்கி, புலவர் குழந்தையின் ராவண காவியம் வரையுள்ள நூல்களில் இருந்து தொகுக்கப்பட்ட நல்முத்துக்கள் இப்பேழையில் உள்ளன. இது ஆசிரியர் தமிழின் பால் கொண்ட அன்பை காட்டுகிறது. சிந்தாமணிக்கு இரு பக்கங்கள், பெருங்கதைக்கு ஒரு பக்கம் என்று ஒதுக்கி, தன் தமிழ் அபிமானத்தை காட்டியிருக்கிறார். மணிவாசகரின் "அம்மையே அப்பா, ஒப்பிலா மணியே என்ற அழகான பாடலும் இதில் அடக்கம். பாரதியின் "சிந்து நதியின் மிசை நிலவினிலே என்ற கருத்தும் உண்டு. மத்திய அரசு பணியில் இருந்த ஆசிரியர், தன் தமிழ்ப்பற்றை இந்த நூலில் காட்டியிருப்பது சிறப்பானது.