/ கட்டுரைகள் / தமிழ் இன்பம்
தமிழ் இன்பம்
பக்கம்: 192 "செந்தமிழுக்குச் சேதுப் பிள்ளை என்று ஆன்றோரால் புகழப்படும், சொல்லின் செல்வரின் அருமையான நூல் இது. என்று, எப்பொழுதும் படித்தாலும் இனிக்கும் தமிழில், இன்பம் தரும் நூல் எனலாம்.இந்நூலில், 40 கட்டுரைகள் உள்ளன. பலவிதச் சுவைகளைத் தரும் இந்நூல், தமிழ் ஆர்வலர்களுக்கு ஓர் கையேடு என்று கூறலாம்."திண்டிவனம், என்ற சொல்லிற்கு, "புளியங்காடு என்ற பொருள் என்றும் (பக்.17), "ஒப்பிலியப்பனே - உப்பிலியப்பன் என்று மருவியது என்றும் (பக்.145), "பந்தல் என்ற மேன்மையான சொல், செட்டி நாட்டிலே அமங்கலச் சொல்லாகக் கருதப்படுகிறது என்றும், (பக்.56) விளக்கி, நமக்குத் தமிழ் இன்பம் வாரி வழங்கும் அறிஞர். ரா.பி.சேதுப்பிள்ளையின் இந்நூல் அன்னார்க்கும் பெருமை கூட்டிய நூல் என்பர்.அனைவரும் படித்து, இன்பம் பெற வேண்டிய நூலாகும்.