/ சமயம் / தமிழ்ச் சித்தரியலும் கிறிஸ்தியலும்
தமிழ்ச் சித்தரியலும் கிறிஸ்தியலும்
சமய நல்லிணக்கத்துடன் வாழ வழிகாட்டும் நுால். சித்தர்களின் முக்கிய கோட்பாடான ஜாதி மறுப்பு, உருவ வணக்க மறுப்பு, ஆகம வேத சாஸ்திர மறுப்பு, குருவாக இறைவனை உணர்தல், பொய்களை கடிந்து இனம் காட்டல், அன்பு நெறியே இறை என உணர்தல் போன்றவை கிறிஸ்துவ மதத்துடன் முழுதும் பொருந்துவதை சான்றுகளோடு நிறுவுகிறது. உடல் மகத்துவம், நிலையாமை குறித்த தத்துவங்கள், விவிலிய கருத்துகளோடு ஒத்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விவிலியம் பேசும் குரு வணக்க நெறி, சித்தர் கூறும் குரு மார்க்கம் ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. சித்தர் இறை வழிபாடு, விவிலியம் போதிக்கும் ஆராதனை முறைகளும் உள்ளன. சமய பொதுமையை வளர்க்கும் நுால். –- புலவர் சு.மதியழகன்