/ வாழ்க்கை வரலாறு / தமிழ்நாடு முதல்வர்களின் போர்வாள் எஸ்.டி.சோமசுந்தரம்
தமிழ்நாடு முதல்வர்களின் போர்வாள் எஸ்.டி.சோமசுந்தரம்
முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரத்தின் வாழ்க்கை வரலாற்று நுால். அரசியல், அரசு பொறுப்புகள், தனிக்கட்சி என விரிவாக தகவல்கள் உள்ளன.சோழ மன்னர் மரபை ஒட்டியதாக குடும்ப வழி கூறப்பட்டுள்ளது. சிறு கிராமத்தில் பிறந்து, படிப்பால் உயர்ந்தது, படிப்படியாக முன்னேறிய விபரங்கள் நம்பிக்கை ஏற்படுத்தும். கல்லுாரி அரசியல், தி.மு.க.,வில் எம்.பி., அ.தி.மு.க.,வில் அமைச்சராக பதவி வகித்தது தெளிவாக்கப்பட்டுள்ளது. தமிழக அரசியலில் பல முதல்வர்கள் தலைமையில் பொறுப்புகளை நிறைவேற்றியது, ஏற்படுத்திய மாற்றங்கள் என நீண்ட பயணத்தை காட்டுகிறது. தமிழக வரலாற்றில் நடந்த மாற்றங்களுடன் இணைந்த, வாழ்க்கையை பறைசாற்றும் நுால்.– மலர்