/ வரலாறு / தமிழ் நாடகச் சரித்திரம்

₹ 400

தமிழக நாடகக் கலையை வரலாற்று பின்னணியுடன் ஆய்வு நோக்கில் விவரிக்கும் நுால். மரபிலிருந்து நவீனத்துக்கு என்ற முத்தாய்ப்புடன் உள்ளது.நான்கு பிரிவுகளாக எழுதி தொகுக்கப்பட்டுள்ளது. முதலில் மரபு வழியில் நடிக்கப்பட்ட நாடகங்கள் பற்றிய விபரங்கள் கால வரிசைப்படி தொகுத்து தரப்பட்டுள்ளன. அவை, தொல்காப்பிய காலத்தில் துவங்குகிறது. புகழ்பெற்ற நாடகக் கதை சுருக்கமும் இடம்பெற்றுள்ளது.தொடர்ந்து நவீன நாடகங்கள் குறித்த விபரம் மலர்ந்துள்ளது. நவீன நாடகங்கள் ஏற்படுத்திய எழுச்சி, தாக்கம் பற்றியும் சுருக்கமாக குறிப்பிடுகிறது. நவீன நாடகங்களின் பல்வேறு கூறுகளையும், அவற்றை உருவாக்கியோர் குறித்தும் தெளிவாகக் கூறகிறது.தமிழகத்தில் நாடகக்கலை வரலாறு பற்றி அறிய உதவும் நுால்.– ராம்


முக்கிய வீடியோ