/ கதைகள் / தமிழ்த் திரையில் நாவல்கள்
தமிழ்த் திரையில் நாவல்கள்
பொன்னியின் செல்வன் உட்பட 50 நாவல்களின் திரைப்பட வடிவம் பற்றிய புத்தகம். விமர்சன நோக்கில் விளக்கி, நடிகர்கள் மற்றும் கதாபாத்திரங்களை பட்டியலிட்டு காட்டுகிறது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பொன்னியின் செல்வன் நாவல் கதையை, படமாக்க எண்ணியிருந்ததையும் அதன் பின்னணியையும் அறியத் தருகிறது. பின் அதே கதையை நடிகர் கமல்ஹாசன் படமாக்க எண்ணி எடுத்த முயற்சிகளையும் விளக்குகிறது. பழைய திரைப்படமான சரஸ்வதி சபதம் கதை, புதுமைப்பித்தன் நாடகமாக எழுதியிருந்ததை தெரிவிக்கிறது. எழுத்தாளர் ஜெயகாந்தன் இயக்கத்தில் உருவான உன்னைப் போல் ஒருவன் திரைப்படம் பற்றிய தகவலும் தரப்பட்டுள்ளது. நாவல், திரைப்பட வடிவமானது குறித்து விளக்கும் நுால். – முகிலை ராசபாண்டியன்




