/ கட்டுரைகள் / தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல்
தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல்
இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு முன், தமிழகத்தில் ஜாதி இருந்த நிலையை ஆதாரப்பூர்வமாக எடுத்துக் கூறும் நுால். அரிய ஆவணங்களில் இருந்து தகவல்களை தேடி எடுத்து ஆய்வுப்பூர்வமாக கூறுகிறது.தமிழகத்தில் 1871ம் ஆண்டுக்கு முன் இருந்த ஜாதி அமைப்புகள் பற்றிய தகவல்கள் உள்ளன. தமிழகத்தில் நடந்த தொழில்கள், தொழிலாளர்கள் செயல்பாடு, அவர்களின் தொடர்பு எல்லை என விரிவான விபரங்கள் தரப்பட்டுள்ளன.மொத்தம் 13 தலைப்புகளில் தகவல்கள் திரட்டி ஆய்வுடன் தரப்பட்டுள்ளன. ஐரோப்பியர் வருகையின் போது, தமிழக நிலை பற்றிய வரலாற்று செய்திகளையும் கொண்டுள்ளது. அரிய வரலாற்று தகவல்கள் நிறைந்த ஆய்வு நுால். தமிழக வரலாற்றை அறிய உதவும்.– ஒளி