/ தமிழ்மொழி / தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்

₹ 200

தொன்மை தமிழ்நாட்டு அழகுக்கலைகளைக் கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, காவியக்கலை, ஆடல் கலை, நாடகக்கலை ஆகிய தலைப்புகளில் ஆய்ந்து வழங்குகிறது இந்த நுால். மரத்தால் அமைக்கப்பட்ட கோவில்கள், பிற்பாடு செங்கல் மற்றும் சுண்ணாம்புச் சுவர்களாலும் மாறிய கட்டடக்கலை பற்றி,நேர்த்தியாக முன்வைக்கப்பட்டுள்ளன. மண்ணில் துவங்கி, தந்தம், கல், உலோகம், மெழுகு என, சிற்பக்கலை விரிந்து சென்றது விளக்கப்பட்டுள்ளது. இசையின் இலக்கிய, இலக்கண நுால்கள் பற்றிய தகவல்களோடு, பரிபாடல்களைப் பற்றிய குறிப்புகளும் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. தேவாரத்திற்குப் பண்ணடைவு செய்தளித்தவர் ஒரு பெண் பாவலர் என்பது வியப்புக்குரியது. சங்கப்பாடல் மற்றும் காப்பியங்களில் இருந்து சான்றுகள் தந்து விளக்கிச் செல்வது வலு சேர்க்கிறது. தமிழர் வரலாற்றில் கலைகளின் சிறப்புகளை அறிந்து கொள்ள உதவும் அரிய நுால்.– மெய்ஞானி பிரபாகரபாபு


புதிய வீடியோ