/ கட்டுரைகள் / தமிழர்களின் சமயச் சடங்குகள்

₹ 200

தமிழர்களின் சமயச் சடங்குகளின் உள்ளார்ந்த அர்த்தங்களை விளக்கும் நுால். குழந்தை பிறந்தது முதல், முதுமை அடையும் வரை உள்ள சடங்குகளை வரிசைப்படுத்துகிறது. உயிர் பிரிந்தவுடன் செய்யும் சடங்குகளையும் குறிப்பிடுகிறது.மங்கலச் சடங்காக சேனை தொட்டு வைத்தல், குழந்தையை தொட்டிலிடுதல், பெயர் வைத்தல், குழந்தைக்கு உணவு ஊட்டுதல், காது குத்துதல், எழுத்தறிவித்தல், பூப்புனித நீராட்டு, திருமண உறுதி, பொன்னுருக்குதல், வளைகாப்பு போன்ற மங்கலச் சடங்குகளை விளக்குகிறது. சடங்குகளின் தோற்றம், பரிசம் போடுதல், அரசாணிக்கால் நடுதல், கன்னிகா தானம், அம்மி மிதித்தல், வளைகாப்பு, தொட்டில் கட்டுவது போன்ற பயனுள்ள கருத்துகளை அறிய தரும் நுால்.– புலவர் ரா.நாராயணன்


சமீபத்திய செய்தி