/ கவிதைகள் / தமிழுக்குள் சிறு தவம்

₹ 140

இயற்கை அழகு, கார்கால மழைச்சாரல், வாழ்க்கை என பல பொருட்களில் இயற்றப்பட்ட கவிதைகளின் தொகுப்பு நுால். மிருகத்தில் மனிதம் நிறைந்திருக்கிறது, தந்தை என்பவர் ஒரு விந்தை, எதிர்பார்ப்புகள் இல்லாதவர், தன்னையே அர்ப்பணித்தவள் அன்னை போன்ற உணர்வுடன், உறவுகளை பிரதிபலிக்கின்றன. பல உலகளாவிய சிந்தனைகளை உடையது. மனிதம் கற்க வேண்டுமானால் சென்னையில் மழைக் காலத்திற்காக காத்திருக்க சொல்கிறது. இயந்திர வாழ்க்கைக்கு மட்டுமே பழகிய மாநகரம், மழைநீரின் நீட்சியாக மனிதன் மற்றும் உயிரினங்களை மதிக்கும் என மழைக்காலச் சென்னையை காட்சிப்படுத்துகிறது. மனித உணர்வுகளையும் உறவுகளையும் சமூக அவலங்களையும் சித்தரிக்கும் கவிதை நுால்.– புலவர் சு.மதியழகன்


முக்கிய வீடியோ