/ ஆன்மிகம் / தமிழுக்கும், பக்திக்கும் பங்களிப்புச் செய்த 50 ஆளுமைகள்
தமிழுக்கும், பக்திக்கும் பங்களிப்புச் செய்த 50 ஆளுமைகள்
தமிழறிஞர்கள், அருளாளர்கள், இறையடியார்கள், கவிஞர்கள் 55 பேரை பட்டியலிட்டு தமிழ் தொண்டு, படைப்பு, வாழ்வை செய்யுள் வடிவில் வடித்துள்ள நுால்.ஓம் மகா கணபதியே நமஹ என்ற தலைப்பில் துவங்குகிறது. தொடர்ந்து முருகர், சிவபெருமான், சேக்கிழார் பெருமான், அவ்வையார், திருநாவுக்கரசர், கம்பர், இளங்கோவடிகள், தமிழ் தாத்தா உ.வே.சா., என தலைப்புகள் இடம் பெற்றுள்ளன.இவர்களின் இறைநெறி செயல்கள் பல ஆயிரம் இருந்தாலும், பக்தி பெருக்கையே முன்னிலைப்படுத்தி கவிதைகள் எழுந்துள்ளன.மொழிக்கும், சமுதாயத்திற்கும் செயற்கரிய செயல் புரிந்து, தொண்டாற்றி காலத்தோடு கலந்த பெருமக்களை அறிந்து கொள்ள வழிவகுக்கும் நுால்.– வி.விஷ்வா