/ ஆன்மிகம் / தமிழுக்கும் சைவத்திற்கும் மறைமலை அடிகளின் மகத்தான பங்கு
தமிழுக்கும் சைவத்திற்கும் மறைமலை அடிகளின் மகத்தான பங்கு
மறைமலை அடிகளின் வாழ்க்கையை, 77 தலைப்புகளில் மிக எளிய நடையில் விளக்கும் நுால். பெயரை மாற்றியது, மாமன் மகளை மணந்தது பற்றி எல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளது.தெ.பொ.மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ் பயின்றது, சென்னை பல்லாவரத்தில் வசித்தது பற்றி கூறப்பட்டுள்ளது. பரிதிமாற் கலைஞரால் சென்னை கிறித்துவ கல்லுாரியில் பணி பெற்றதும் உள்ளது.மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் பாண்டித்துரை தேவர் அன்பைப் பெற்றதும், சுயமரியாதை இயக்கத்தைக் கண்டித்ததும் பதிவாகியுள்ளது. திருவள்ளுவர் ஆண்டை பரப்பியவரின் பெருமை கூறும் நுால்.– முனைவர் கலியன் சம்பத்து