/ சட்டம் / தகவல் பெறும் உரிமைச் சட்டம்
தகவல் பெறும் உரிமைச் சட்டம்
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்த வழிகாட்டும் நுால். எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து விபரமாக தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் மத்திய அரசின் தகவல் ஆணைய முகவரிகளுடன், பொது தகவல் அலுவலர்கள் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர்கள் பட்டியலும் தரப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்கும் தனித்தனியே தரப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கோ அல்லது வங்கிக்கோ எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதில் சிறு மாற்றம் உண்டு. இது பற்றி முழு தகவல்களை கொண்டிருக்கவில்லை. தமிழக அரசிடம் மட்டுமே தகவல்களை பெறும் வகையில் உள்ளது. சமூக ஆர்வலர்களுக்கும், பாதிக்கப்பட்டோருக்கும் பயன்படக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள நுால். – பின்னலுார் விவேகன்




