/ கதைகள் / தாய்: உலகப் புகழ் பெற்ற காவியம்
தாய்: உலகப் புகழ் பெற்ற காவியம்
பக்கம்: 597 மார்க்சிம் கார்க்கியால், 1907ம் ஆண்டு, எழுதப்பட்ட இந்த நவீனம், உலகில் மிகச் சிறந்த நவீனமாக, மிகச் சிறந்த இலக்கியவாதிகளால் பாராட்டப்பட்டது. 127 மொழிகளில், மொழி மாற்றம் செய்யப்பட்ட இந்த நாவலின் வயது, 105 ஆண்டுகள், இன்றளவும் இலக்கிய வாசகர்களால் வரவேற்கப் படுகிறது. 50, 60 ஆண்டுகளுக்கு முன், தொ.மு.சி.ரகுநாதனால் மொழி பெயர்க்கப்பட்டு, வெளியான இந்த தமிழ் வடிவம், மறுபடியும், வாசகர்களுக்கு கிடைக்கச் செய்துள்ளனர்.பாவெல் என்ற அந்தக் கதாபாத்திரம், கார்க்கியின் கற்பனையில் தோன்றியது என்ற போதிலும், நகமும் சதையுமாக, நம்மனைவர் மனக் கண் முன் நிதர்சனமாகி காட்சியளிப்பது போன்ற உணர்வை, வெளிப்படுத்தும் அற்புதமான பாத்திரப் படைப்பு. இந்த நாவலை வாசிக்காதவர்கள், நிச்சயம், ஏதோ ஒன்றை இழந்தவர்களாகவே, கருதப்படுவார்கள்; இலக்கிய உலகில்!