/ தமிழ்மொழி / தமிழின் இனிமை தமிழுக்குப் பெருமை

₹ 100

தமிழகம், தமிழ்த்தாய், மலர்கள், முத்து, நிலா, குயில், தமிழின் இனிமை போன்று பல்வேறு பொருள்களில் அமைந்த, 130 புதுக்கவிதைகளின் தொகுப்பு நுால். நாடு, மொழி, தலைவர்கள் என தேசப்பற்றை விதைக்கும் விதமாகவும் கவிதைகள் உள்ளன.மொழிப்பற்றை விதைக்கும் கவிதைகள் பல... அம்மாவின் அன்பு, முத்தம், தாய்ப்பாசம் என அன்னை மீதான நெருக்கம் புலப்படுத்தும் கவிதைகளும் உள்ளன. ஊனமுற்றோர் தினம், சுதந்திர தினம், புத்தாண்டு குறித்த சிந்தனைகளும் உள்ளன.தமிழ் மணம் பரப்பும் வகையில் கவிதைகள் உள்ளன. குறுங்கவிதைகள், நீண்ட கவிதைகள் என அமைப்பிலும், சினிமா பாடல் வகைமையிலும் தொகுப்பு முழுதும் உள்ளன. எளிய சொற்களில் இனிமை பயக்கும் கவிதை நுால்.– முனைவர் ரா.பன்னிருகைவடிவேலன்


முக்கிய வீடியோ