/ கட்டுரைகள் / தனித்திருந்தாலும் விழித்திருப்போம்!
தனித்திருந்தாலும் விழித்திருப்போம்!
கருத்தின் பன்முகத்தன்மையை கவிதை வடிவில் வெளிப்படுத்தும் தொகுப்பு நுால். உள்ளார்ந்த உணர்வுகளையும், அனுபவங்களையும் பரந்த அளவில் வெளிப்படுத்துகிறது.பல்வேறு தலைப்புகளில், 94 கவிதைகளின் தொகுப்பாக மலர்ந்துள்ளது. அன்றாட வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை வெளிப்படுத்துகிறது. உயிர், மனம், கண்ணீர், மழைநீர், வீடு, தாய், நிழல் போன்றவை முக்கிய கருப்பொருட்களாக உள்ளன. ஒவ்வொரு கவிதையும் இந்த அம்சங்களை தனித்துவ கண்ணோட்டத்துடன் அணுகுகிறது.உதாரணமாக, ‘இளைஞனே வா’ என்ற தலைப்பில் தாய்நாட்டைக் காக்கவும், ஒற்றுமையுடன் இணையவும், வேறுபாடுகளை களைந்து, வாழ்க்கையில் சவால்களை தைரியமாக எதிர்கொள்ளவும் அழைக்கிறது. – வி.விஷ்வா