/ கட்டுரைகள் / தண்ணீர் வளமும் கண்ணீர்த் துளியும்

₹ 190

தமிழகம் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னைக்கு உள்ளாகும் என்பதை முன்னதாகவே அறிந்து, நீர் நிலைகளை வளமாக்கும் திட்டங்களை கட்டுரை வடிவில் கொண்டு சென்ற மூத்த அரசியலாளர் இவர். உழவர்களின் தோழர் என்ற போற்றுதலுக்கு உரியவர்.தமிழகத்தின் வறட்சியைப் போக்கும் வழி, கங்கை – காவிரி இணைப்பு, சேது கங்கா இணைப்பு, நெஞ்சம் குளிரும் நீர் வழிகள் உள்ளிட்டவை, நீர்வள மேலாண்மையின் முக்கியத்துவத்தை விதைப்பதாக உள்ளன.காவிரி உரிமையைக் காப்போம், தாமிரபரணியின் தாகம் தீருமா? ரணமான நதியின் வரலாறு, தமிழகத்தை பாலைவனம் ஆக்காதே, சூழலியல் அமைப்பை வலுவாக்க வாரீர் உள்ளிட்ட கட்டுரைகள், அதல பாதாளத்திற்கு தண்ணீர் வளம் சென்றுவிட்டதை கண்ணீரால் பிரவாகமெடுக்க வைக்கிறார், ஆசிரியர் நல்லகண்ணு.– மாசிலா ராஜகுரு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை