/ வாழ்க்கை வரலாறு / தத்துவமேதை ராபர்ட் கிரீன் இங்கர்சால்

₹ 50

25, பீட்டர்ஸ் சாலை, சென்னை-14. (பக்கம்: 120) ""மனிதர்களை அன்புடன் விரும்பியவன் என்று என் கல்லறையில் எழுதுங்கள் என்று கூறிய பகுத்தறிவு மேதை, "ராபர்ட் கிரீன் இங்கர்சால் வாழ்க்கை வரலாற்றை மிகவும் எளிய நடையில் ஆங்காங்கே அவரது சிந்தனைகளை தொட்டுக் காட்டி சுருக்கமாக படைத்துள்ளார் நூலாசிரியர்.ஒரு பாதிரியாரின் மகனாய் பிறந்து, வழக்கறிஞராய் உயர்ந்து, மத வெறியர்களை தன் வாதத் திறமையால் வென்று, பகுத்தறிவு மேதையாக உயர்ந்தவர் இங்கர்சால்.பொய்மைக்குத் தான் மாட மாளிகைகள், மணிமுடி, செங்கோல், காவலர், படைகள் முதலியன தேவை. மெய்ஞ்ஞானிகள் ஆடம்பரத்தை வேண்டார், அஞ்சார், படைபலத்தை விரும்பார், ""செல்வந்தர்கள் அச்சத்தில் வாழ்பவர்கள், நாம் நம்பிக்கையில் வாழ்பவர்கள். இப்படி ஏராளமான மேற்கோள்கள் நூலுக்கு சுவை சேர்க்கிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை