/ கட்டுரைகள் / தி பெர்த் ஆப் எ போயட் (ஆங்கிலம்)
தி பெர்த் ஆப் எ போயட் (ஆங்கிலம்)
பாரதி மற்றும் அவரது படைப்புகள் பற்றி திறனாய்வாளர் க.நா.சுப்ரமணியம் எழுதிய மதிப்புரைகள், முன்னுரைகளை தொகுத்து தரும் நுால். பதினோரு கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு கவிதைகளும் அடங்கியுள்ளன. இதழ்கள், வானொலியில் இடம்பெற்றவையும் இதில் அடங்கியுள்ளன. பாரதியை கவிஞராக, எழுத்தாளராக, இதழாளராக, பெயர்ப்பாளராக, கேலிச்சித்திரம் புனைபவராக மதிப்புரை செய்துள்ளார். நாட்டுப்பற்றில் பாரதிக்கு இருந்த தீவிர பங்கையும் எடுத்துக்காட்டியுள்ளார். பாரதியின் சாதனை, புரட்சி சிந்தனை, தேசபக்தி, வால்ட் விட்மனும் பாரதியும், தேசியம், கவிதை அனுபவம் என்ற தலைப்புகளில் அமைந்து கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளன. – ராம.குருநாதன்