/ பொது / வருங்கால ஊடக உலகம்
வருங்கால ஊடக உலகம்
பத்திரிகை, ஊடகங்கள் இனி எப்படி செயல்படும் என விவரிக்கும் நுால். பத்திரிகையின் தோற்றம் பற்றிய தகவல் சுவாரசியம் ஏற்படுத்துகிறது. ஒரு செய்தியை வாசகர்கள் எப்படி பார்க்க வேண்டும் என கூறுகிறது. ஒரு பக்க செய்தியை, ஒரு புகைப்படம் சொல்லிவிடும் என்கிறது. இதழியல் வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறிவிட்டதை பகிர்கிறது. பத்திரிகை சுதந்திரம், கட்டுப்பாட்டை விரிவாக அலசுகிறது. அரசின் திட்டங்களுக்கு, பத்திரிகை செய்திகள் வழிகாட்டியாக இருந்ததை சுட்டிக் காட்டுகிறது. பத்திரிகைகள் எப்படி செயல்பட வேண்டும் என அப்துல் கலாமின் அறிவுரையும் தரப்பட்டு உள்ளது. பத்திரிகை டிஜிட்டல் முறைக்கு மாற வலியுறுத்துகிறது. ஊடகத்துறை பெரிய அளவில் மாற்றம் காணும் என தகவல்களுடன் விளக்கும் நுால். – டி.எஸ்.ராயன்




