/ கட்டுரைகள் / மதங்கள் சொல்லும் நற்சிந்தனைகள்

₹ 130

சிறப்பான வாழ்வுக்கு சிந்தனைகளை தொகுத்து தரும் நுால். மதக் கருத்துகளின் குவியலாக உள்ளது. உண்மையான புகழ் எது, சமய நல்லிணக்கம் தேவை, பசித்தவனுக்கு உணவு கொடுப்பது நம் கடமை, தேவை மத ஒற்றுமை, உயர்வு தாழ்வு கூடாது, வெற்றிக்கு வழி, இறந்தும் வாழ்பவர்கள், எல்லா புகழும் இறைவனுக்கே போன்ற தலைப்புகளில் தகவல்கள் தரப்பட்டுள்ளன. சமயங்கள், உயிரினங்களிடம் அன்பாயிரு என போதிக்கிறது. கூழாங்கற்களை கொண்டு பகைவரை வென்ற நிகழ்ச்சியை, ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ என்ற கட்டுரை விவரிக்கிறது. தொழில்கள் இழிவானதில்லை என்பதை விளக்குகிறது. மனதிலிருந்து தான் எண்ணம், செயல் எழுவதால் மனதை துாய்மைப்படுத்தும் நற்சிந்தனையுள்ள நுால். – புலவர் ரா.நாராயணன்


புதிய வீடியோ