/ கட்டுரைகள் / மகாகவி பாரதியும் மகான் குள்ளச்சாமியும்
மகாகவி பாரதியும் மகான் குள்ளச்சாமியும்
மகாகவி பாரதியின் புதுவை வாழ்வு குறித்து அலசி ஆராயும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். புதுவையில் வசித்த போது, குள்ளச்சாமி என்பவருடன் தொடர்பு வைத்திருந்தார் பாரதி. அது குறித்த படைப்புகளும் எழுதியுள்ளார். அவற்றை ஆராய்ந்து புதிய செய்திகளை தருகிறது இந்த புத்தகம். பாரதியின் செயல்பாட்டுக்கு உத்வேகமாக குள்ளச்சாமி அமைந்திருந்ததை எடுத்தியம்புகிறது. மொத்தம், 18 கட்டுரைகள் தொகுப்பில் உள்ளன. பாரதியின் படைப்பாக்கத்தில் உள்ள பன்முக கோணங்களை தருகிறது. பாரதிக்கும், குள்ளச்சாமிக்கும் இருந்த தொடர்புகளை காட்டும் நுால். – ஒளி