/ ஆன்மிகம் / ஸ்ரீ கிருஷ்ணரின் கடைசிக் குழலிசை
ஸ்ரீ கிருஷ்ணரின் கடைசிக் குழலிசை
துவாபர யுகத்தின் இறுதி, கலியுகத்தின் தொடக்க நிலைகளை தர்மத்தின் பாதை எவ்விதம் வழி நடத்துகிறது என்பதை, மகாபாரத கதைமாந்தர்கள் வாயிலாக வித்தியாசமான கண்ணோட்டத்தில் நிறுவும் நுால். மூழ்கிய நகரமான துவாரகா பின்புலத்தில் ஆன்மிக உணர்வு இழையோட எழுதப்பட்டுள்ளது. சாபத்தாலும், கோபத்தாலும் ஒரு குலம் சீரழிந்த அவலத்தை, ‘கர்மம் தன் பாதையை தானாக தேடிக்கொள்ளும்’ என்பதை உரைக்கிறது. அமைதியான குழலிசையால் கிருஷ்ண உபதேசம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. நான் தெய்வமானால் கர்மத்தின் சட்டம் எனக்கும் மேலானது. தர்மத்தை பாதுகாப்பவர்களை தர்மம் பாதுகாக்கும் என்ற உபதேச மொழிகள் உன்னதமாக கூறப்பட்டுள்ளன. வாசகர்களை வசப்படுத்தும் நுால். – பின்னலுார் விவேகன்




