/ ஆன்மிகம் / நவக்கிரகங்களும் அவற்றிற்குரிய தோஷப் பரிகாரங்களும்
நவக்கிரகங்களும் அவற்றிற்குரிய தோஷப் பரிகாரங்களும்
ஒன்பது நவக்கிரகங்கள், தோஷங்கள், பரிகாரம் பற்றி கூறும் நுால். எந்த லக்னத்தில் சூரியன் நின்றால் என்ன பலன், சந்திரனுக்கு தோஷம் எப்படி ஏற்படும், நவக்கிரக ஸ்தோத்திரம் உட்பட, 12 தலைப்புகளில் விளக்குகிறது. கிரகங்கள், 27 நட்சத்திரங்களை குறிப்பிடுகிறது. தலைமைப் பொறுப்பில் சூரியன் இருப்பதால் ஆண் தன்மை உள்ளது என விளக்குகிறது.மேஷம் முதல் மீனம் வரை, 12 ராசிகளையும் சொல்கிறது. சனிக்கிரக வலிமை பற்றி குறிப்பிடுகிறது. நவக்கிரகங்களுக்கு உரிய பூஜை பொருட்களை அறியத்தருகிறது. கிரகங்களுக்கு பரிகார பூஜை முறையையும் தெரிவிக்கிறது. நவக்கிரகங்கள் பற்றி விளக்கும் ஜோதிட நுால். – புலவர் ரா.நாராயணன்