/ கவிதைகள் / புதுக் கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்

₹ 400

புதுக்கவிதை தோற்றம், வளர்ச்சி குறித்த செய்திகளை தரும் நுால். சாகித்திய அகாடமி விருதை 1978ல் பெற்றுள்ளது. புதுமை படைத்த கவிஞர்களையும், அவர்கள் உருவாக்கிய ஆக்கங்களையும் கால வரிசைப்படி அறிமுகம் செய்கிறது. யாப்பின் எளிய வடிவமான புதுக்கவிதை தமிழில் தோன்றி வளர்ந்த விதத்தை, தக்க உதாரணங்கள் வாயிலாக விளக்குகிறது. பாரதியி ன் புதுக்கவிதை திறன் பற்றி சிலாகிக்கிறது. புதுக்கவிதையின் வடிவத்திலும், உள்ளடக்கத்திலும் மாற்றங்கள் ஏற்படுத்திய கவிஞர்களின் படைப்புகளை அறிமுகம் செய்கிறது. தமிழகத்தில் மட்டுமல்ல; இலங்கை தமிழர் பண்பாட்டுடன் புதுக்கவிதைக்குள்ள உறவை எடுத்துரைக்கிறது. புதுக்கவிதை வளர்ச்சியை அறிய தரும் நுால். – மதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை