/ கட்டுரைகள் / பாபா காட்டிய பாதை

₹ 210

சீரடி சாய்பாபாவின் ஆன்மிக வழிநடத்துதலை எடுத்துரைக்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். சீரடி சாய்பாபா காட்டிய பாதையில் நடக்க, எளிய வாழ்க்கை முறையை கடைப்பிடித்தால் போதும் என எடுத்துரைக்கிறது. உணர்வுப்பூர்வமாக மனதில் எண்ணினாலே அற்புதங்கள் நடக்கும் என வழிகாட்டுகிறது. பூஜைகள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்கிறது. பாபா காட்டிய அன்பு வழியை எளிய நடையில் எடுத்துரைக்கிறது. பசியோடு இருப்போருக்கு உணவு கொடுப்பதே மேன்மை என உரைக்கிறது. தவறுகள் செய்யாமல் இருந்தால் உண்மை வளமோடு வாழலாம் என உரைக்கிறது. வாழ்வில் பிரச்னைகள் ஏற்படும் போது அதை எதிர்கொள்ள வழிகாட்டுதல்கள் பாபாவிடம் இருந்து கிடைக்கும் என்பதை அனுபவப்பூர்வமாக தரும் நுால். – ராம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை