/ ஜோதிடம் / கிரஹ யுத்தம் சமாகமம் மற்றும் அஸ்தங்கதம்

₹ 200

ஜோதிடத்துக்கு விளக்கம் கூறும் நுால். வடமொழி நுால்கள் கருத்து படி, கோசார பலன்களில் ராசிகளை நிர்ணயம் செய்வது குறித்து விளக்கம் தரும் நுால். ஒவ்வொரு நட்சத்திர பாதத்திற்கும், கோசார சனி காலம் அட்டவணையாக தரப்பட்டுள்ளது. ஜாதகத்தில் கூட்டுக் கிரகங்களின் சேர்க்கை பலன்கள் கூறியதை பின்பற்றாமல், கூட்டுக் கிரக பாவச் சக்கரத்தைப் பார்க்க கூறுகிறது. சூரிய உதயத்திலிருந்து நண்பகல், மாலைப் பொழுது, நடு இரவு நிலைகளைக் காட்டும் புவி வரைபடங்கள் உள்ளன. அஸ்தங்கத தோஷம் கூடுதல் விளக்கம் தரப்பட்டுள்ளது. சர்வார்த்த சிந்தாமணி, சாராவளி விளக்கம் உள்ளது. ஜோதிட சாஸ்திரத்தை அறிய உதவும் நுால். – முனைவர் கலியன் சம்பத்து


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை