/ வரலாறு / முதலாம் உலகப்போரின் அதிர்வுகள்

₹ 240

முதலாம் உலகப் போரின் பின்னணியில் சீரியசான காரணம் இருக்கும் என்று தானே நினைப்போம். உண்மையில் ஒரு புதுமணத் தம்பதியின் தேன்நிலவு ஆசை தான், இந்த போருக்கே காரணமாக அமைந்தது என்றால் வியப்பு ஏற்படத்தானே செய்யும். தேனிலவா... ஒரு உலகப் போருக்கு வித்திட்டது என்று தானே வியக்கிறீர்கள். ஆனால், இது தான் உண்மை. அப்படி என்ன தான் நடந்தது... தேன்நிலவு சென்றவர்கள் யார்... எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்... அவர்களுக்கும், உலகப்போருக்கும் என்ன சம்பந்தம்... இப்படி தலையை பிய்க்கும் கேள்விகளுக்கு இந்த புத்தகம் விடை தருகிறது. ஒரு போஸ்டர் எந்த அளவுக்கு ஒரு நாட்டின் வரலாற்றில் இடம் பிடிக்கும்... நாட்டுப்பற்றை துாண்டி விடும் என்ற வித்தியாசமான தகவலும் இருக்கிறது. உலகப் போருக்கு காரண மாக இருந்தவை ஆரம்பத்தில் இரண்டு நாடுகள். அவை, இந்தியாவை விட்டு எங்கோ தள்ளி இருக்கின்றன. ஆனால், இந்தியா இந்தப் போரில் பங்கேற்கிறது. ஏன் இந்த நிலைமை? இதற்கு விடை தருகிறது. உலகப் போரில் கோடிக் கணக்கானோர் இறந்தனர். எத்தனை கோடி என்று தெரிந்தால் மயங்கியே விடுவீர்கள். முதலாம் உலகப் போரிலே வித்தியாசமான சண்டைக் காட்சிகள் நடந்தன. அந்த போர் முறைகள் தான் என்னென்ன... இது போன்ற கேள்விகளுக்கு விடை தந்து, வரலாற்றை திரும்ப பார்க்க வைக்கும் அருமையான புத்தகம். ஒரு நாவலை படிக்கும் ஆவலை துாண்டுகிறது. இந்த புத்தகத்தை உருவாக்க, பல புத்தகங்கள் புரட்டப் பட்டிருக்கும் என்பதை படிக்கும் போதே தெரிந்து கொள்ளலாம்; அவ்வளவு தகவல்கள் உள்ளன. இளைய தலைமுறைக்கு குறிப்பாக மாணவர்களுக்கு இந்த புத்தகம் ஒரு வரப்பிரசாதம். – தி.செல்லப்பா


புதிய வீடியோ